search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaza protest"

    இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். #Palestinian #WomanKilled #GazaProtest
    காஸா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா முனைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் காஸா பகுதி போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலும் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது ஒரு குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கண்ட தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை மந்திரி அஷரப் குவத்ரா தெரிவித்தார். #Palestinian #WomanKilled #GazaProtest 
    காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #GazaProtest #IsraeliTroops
    இஸ்லாமாபாத்:

    பாலஸ்தீனத்தில் 1948-ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    ஆனால் இதை இஸ்ரேல் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    12 வயதான நாசர் மோசாபிஹ் என்ற சிறுவன், தெற்கு காசா பகுதியில் உள்ள கான்யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இதே போன்று 14 வயதான முகமது அல் ஹூம் என்ற மற்றொரு சிறுவன் அல்புரேஜ் என்ற இடத்திலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்..

    மேலும் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 210 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.  #GazaProtest #IsraeliTroops 
    ×