search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas leak"

    காரமடை அருகே கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வசந்தம் அவென்யூவை சேர்ந்தவர் அனிஸ்குமார். மின்சார வாரிய ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 45).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் டீ போடுவதற்காக கியாஸை திறந்தார். அப்போது பால்காரர் பெல் அடிக்கு சத்தம் கேட்டு பால் வாங்குவதற்காக சென்றார்.

    அடுப்பில் இருந்து கியாஸ் வெளியேறி வீடு முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் ஸ்ரீ தேவி அடுப்பை பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ பிடித்து ஸ்ரீ தேவியின் உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்காமல் அவர் சத்தம் போட்டார்.

    உடடினயாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஸ்ரீ தேவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீ தேவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இன்று காலை திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு ஓட்டலில் தீ பிடித்தது. இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஓட்டல்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு காதர் மீரான் (வயது 45) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இன்று காலை 6 மணி அளவில் அவரது கடையில் பெண் ஊழியர் விஜயா (40) கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதை அறிந்த விஜயா தீயை அணைக்க முயன்றார். அனால் தீ குபீரென்று பிடித்து மேலே சென்ற மின்சார வயர் மீது பட்டது. இதனால் கடை முழுவதும் தீ பரவியது.

    உடனே கடையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமள வென பரவியது.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஓட்டலில் இருந்த மேஜை மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்தன. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக் குறிச்சி சப்-இன்ஸ் பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ×