என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gambhir daughter yo yo test
நீங்கள் தேடியது "Gambhir daughter Yo Yo Test"
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஆன கவுதம் காம்பீர் தனது மகள் செய்த யோ-யோ டெஸ்டை படம்பிடித்து வேடிக்கையாக ஷேர் செய்துள்ளார். #Gambhir
இந்திய அணியின் முன்னணி இடது கை பேடஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறாவிடிலும், அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரஞ்சி டிராபி, ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 36 வயதாகும் காம்பீர் கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளுக்கு அவ்வப்போது கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது யோ-யோ டெஸ்ட் மீது பல்வேறு விமர்சனம் கிளம்பியது. இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு ஜாம்சன், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அம்பதி ராயுடு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யோ-யோ டெஸ்ட் மட்டுமே அடிப்படை தகுதியாக இருக்கக்கூடாது என சச்சின் தெண்டுல்கர் உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கவுதம் காம்பீர் தனது மூத்த மகள் ஆசீன் யோ-யோ டெஸ்ட் செய்து அதில் வெற்றி பெற்றதை வீடியோவாக எடுத்து இணைய தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

Looks like my elder one Aazeen has cleared the Yo-Yo test!!! What do you think @YUVSTRONG12@harbhajan_singh@sachin_rt ? pic.twitter.com/rP4KIkRDrs
— Gautam Gambhir (@GautamGambhir) July 22, 2018
×

X