search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Coaching"

    • விருதுநகரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
    • மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.

    விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • "குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
    • 2-ந் தேதி தொடங்குகிறது.

    அரியலூர்

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவ-மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
    • வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் துணை வட்டாட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம், பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    • யு.ஜி.சி., நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
    • பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்த–ப்பட்ட, சிறுபான்மையினர் மாணவர்களுக்கான பல்கலைக்கழக மானியக்குழு தகுதி தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் 4ந் தேதி முதல் 6ந் தேதி வரை 3 நாட்கள் தேசிய தேர்வு முகமை நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கு தேசிய தகுதி தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

    பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், பேராசிரியர் ஆனந்தகுமாரிடம் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் கேசவராஜராஜன் தெரிவித்துள்ளார்.

    ×