போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

விருதுநகரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com