search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Four persons arrest"

    கூரியரில் வந்த பொருட்களை பணத்தை பெற்றுக் கொண்டு வினியோகம் செய்யாததால் கூரியர் ஊழியரை கடத்தி சித்ரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    சவுகார்பேட்டை வால்டாக்ஸ் சாலையில் தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. ஆன்லைன் மூலம் ஆடர் செய்யப்படும் பொருட்களை இவர்கள் வினியோகம் செய்து வந்தனர். இங்கு திலீப் சிங் என்பவர் கூரியரில் வரும் பொருட்களை வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி முதல் திலீப் சிங் பணிக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார். இதுகுறித்து கூரியர் நிறுவன உரிமையாளர் யானைகவுனி போலீசில் புகார் செய்தார். இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் திருமங்கலத்தை சேர்ந்த சவுந்திர பாண்டியன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திலீப் சிங் குறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

    அதில் ஆன்லைன் மூலம் ஆடர் செய்த ரூ.6 லட்சம் மதிப்பிலான புரோட்டின் உணவு பொருட்களை திலீப் சிங் வினியோகம் செய்யவில்லை. பணத்தை அவரிடம் கொடுத்து இருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

    அப்போது திலீப் சிங்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வெளியே விட்டு விட்டனர். இதுபற்றி திருமங்கலம் போலீசார் யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கூரியரில் வந்த பொருட்களை பணத்தை பெற்றுக் கொண்டு வினியோகம் செய்யாததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திலீப் சிங்கை சவுந்திரபாண்டியன் தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வைத்திருந்தது தெரிந்தது.

    திலீப் சிங்கை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து கடந்த ஒரு வாரமாக சித்ரவதை செய்து இருக்கிறார்கள். போலீசார் திலீப் சிங்கை மீட்டனர்.

    இது தொடர்பாக அமைந்தகரையை சேர்ந்த உமா சங்கர், எம்.எம்.டி.ஏ. காலனி அசோக்குமார், பெரம்பூர் கோகுல், நொளம் பூர் சிவராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான சவுந்தர பாண்டியனை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×