search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flower shops seal"

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள 129 மொத்த பூக்கடைகளுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது.
    ராயபுரம்:

    பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பத்ரியன் தெருவில் மொத்த பூ விற்பனை கடைகள் உள்ளன.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பதற்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து பத்ரியன் தெருவில் சிலர் மொத்த பூ வியாபாரம் செய்தனர்.

    சீல் வைக்கப்பட்ட கடைகளை உடைத்து விட்டு மீண்டும் பூ வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்களை இதே பகுதியில் பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் வியாபாரிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையடுத்து பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள 129 மொத்த பூக்கடைகளுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. சி.எம்.டி.ஏ. அதிகாரி, உயர் அதிகாரிகள் பிரேம் ஆனந்த் சுரேந்தர், ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில்கடைகள் சீல் வைக்கப்பட்டன. 15 ஊழியர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×