search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA 2018"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெல்ல ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் அணிகளுக்கு வாய்ப்பு என சுனில் செத்ரி தெரிவித்துள்ளார்.
    ரஷியாவில் வருகிற வியாழக்கிழமை (14-ந்தேதி) உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்குகிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 32 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக சுனில் சேத்ரி உள்ளார். இந்திய அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரஷிய உலகக் கோப்பையில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று சுனில் செத்ரியிடம் கேட்கப்பட்டது.



    அப்போது ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று சுனில் செத்ரி கூறியுள்ளார். சுனில் செத்ரி இந்திய அணிக்காக 101 போட்டிகளில் விளையாடி 62 கோல்கள் அடித்துள்ளார்.
    ×