search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fewer cases"

    • இலசவமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் இன்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு குறைந்ததது.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த நிலையில் தமிழக அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. மேலும், இலசவமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

    ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது

    நெல்லை மாவட்டத்திலும் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தில் திடீரென இரட்டை இலக்கத்திற்கும், பின்னர் மூன்று இலக்கத்திற்கும் சென்றது. அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் இன்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு குறைந்ததது.

    புதிதாக 9 பேருக்கு தொற்று

    பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆய்வகங்களில் நடந்த பரிசோதனை முடிவில் புதிதாக 9 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதியானது.

    இதில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 3 பேர், மானூரில் 3 பேர் அடங்குவர். அம்பையில் 2 பேர், வள்ளியூரில் ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×