search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers and traders should come forward to sell and buy products; Collector Sangeeta"

    • இ-நாம் திட்டத்தின்கீழ் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்ய விவசாயிகள், வியாபாரிகள் முன்வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் இ-நாம் எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உரிய தரப்பகுப்பாய்வு செய்து சந்தைப்படுத்திட ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. இவ்வசதியினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு முறையில் தேசிய அளவில் சந்தைப்படுத்திட வாய்ப்பு ஏற்படுத்ததப் பப்பட்டுள்ளது.

    மேலும் சொந்த மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வணிகர்கள், இணைய வழியில் பங்கேற்கும் வசதி உள்ளதால் போட்டி அடிப்படையிலான லாபகரமான விலையினை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு பெறலாம்.

    விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே எவ்வித இடைத்தரகர்களும் இன்றி விற்பனைத்துறை அலுவலர்களின் உதவியுடனான நேரடி வர்த்தகம் நடைபெறுவதால் இடைத்தரகு/கமிஷன் போன்றவை இத்திட்டத்தின் கீழ் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு விற்பனைத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 48 மணி நேரத்தில் மின்னணு முறையில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    லாபகரமான வரவு கிடைப்பதால் விவசாயிகளும் தரமான விளைபொருட்களை கொள்முதல் செய்வதால் வியாபாரிகளும் இத்திட்டடத்தினால் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை மதுரை மாவட்டத்தில் 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர். இந்நிதி யாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 589 விவசாயி களின் 2369 டன் அளவிலான விளைபொருட்கள் 3 கோடியே 59 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 589 விவசாயிகள் 79 வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையினைப் பெற்றிட தத்தமது பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு சென்று தங்களைப் பதிவு செய்து கொண்டும் வியாபாரிகள் உரிய உரிமம் பெற்றும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இ-நாம் திட்டத்தின் கீழ் பதிவு செய்திட விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    ×