search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explosion in Kulgam"

    காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரங்களை இன்று ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், குல்காம் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். #RajnathSingh
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் கடந்த 21-ம் தேதி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த தகவல் அறிந்து அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் லாரூவில் திரண்டனர். அப்போது அங்கு திடீரென்று மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.



    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் வந்தார். மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக கவர்னர் மற்றும் அம்மாநில உள்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால குறிப்பிட்டார். குறிப்பாக, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது கல்லெறியும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    கடந்த குல்காம் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்தார். #RajnathSingh #Srinagar
    ×