search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delusion"

    • இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்
    • கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை

    கடலூர்:

     பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் சிநேகா (22). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.    கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசில் சிநேகாவின் தந்தை தனசேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிநேகாவை தேடி வருகின்றனர்.

    • 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை‌

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர் இளம்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • இவரின் மனைவி , காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எடையார் பாளையம் மாரியம்மன் கோவில் வடக்குவீதியைச்சேர்ந்தவர் ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது புதுச்சேரி சென்று வரும் இவர், மாதம், மாதம் தனது மனைவி கோவிந்தம்மாளுக்கு சம்பளம் பணத்தை அனுப்பி வந்துள்ளார்.   கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சென்று விட்டு, காரைக்கா லுக்கு வேலைக்கு செல்வ தாக கூறி காரைக்கால் வந்துள்ளார்.  கடந்த 3-ந் தேதி, மனை விக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அதற்கு வீட்டுக்கு வரும்படி மனைவி கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஓட்டலில் இருந்து காரைக்கால் நகர் பகுதிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜு, அன்று இரவு வரை ஓட்டலுக்கு திரும்பவில்லையென கூறப்படுகிறது   ஓட்டல் உரிமையாளர் மூர்த்தி, கோவிந்தம்மாளுக்கு போன் செய்து, ராஜு, புதுச்சேரி வந்தாரா என கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் புதுச்சேரி வரவில்லையென கூறியுள்ளார். பின்னர், 7-ந் தேதி கோவிந்தம்மாள் காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.  இது குறித்து, கோட்டுச்சேரி போலீசில், ராஜுவை தேடி கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    • ரஜினிகாந்த் (வயது 45). இவர் மணக்குப்பத்தில் ஸ்டார் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை உறவினர்கள் வீடுகளிலும் பல்வேறு பகுதிகளிலும் தேடியுள்ளார்.


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மனக்குப்பம் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 45). இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர். இவர் மணக்குப்பத்தில் ஸ்டார் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2ந் தேதி பெரியசோலையில் உள்ள கல்பரதேசி சித்தர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை உறவினர்கள் வீடுகளிலும் பல்வேறு பகுதிகளிலும் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் வனிதா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஊழியர் மாயமானார்.
    • இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரதுமகன் வினோத்குமார் ( வயது30 ). இவர்புதுவைதிருவண்டார்கோவில் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அவரதுசெல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ரங்கநாதன்புதுப்பேட்டைபோலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்.

    ×