என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் கோட்டுச்சேரியில் புதுவையை சேர்ந்தஓட்டல் ஊழியர் மாயம்: போலீசில் மனைவி புகார்
- ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார்.
- இவரின் மனைவி , காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி எடையார் பாளையம் மாரியம்மன் கோவில் வடக்குவீதியைச்சேர்ந்தவர் ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது புதுச்சேரி சென்று வரும் இவர், மாதம், மாதம் தனது மனைவி கோவிந்தம்மாளுக்கு சம்பளம் பணத்தை அனுப்பி வந்துள்ளார். கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சென்று விட்டு, காரைக்கா லுக்கு வேலைக்கு செல்வ தாக கூறி காரைக்கால் வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி, மனை விக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அதற்கு வீட்டுக்கு வரும்படி மனைவி கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஓட்டலில் இருந்து காரைக்கால் நகர் பகுதிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜு, அன்று இரவு வரை ஓட்டலுக்கு திரும்பவில்லையென கூறப்படுகிறது ஓட்டல் உரிமையாளர் மூர்த்தி, கோவிந்தம்மாளுக்கு போன் செய்து, ராஜு, புதுச்சேரி வந்தாரா என கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் புதுச்சேரி வரவில்லையென கூறியுள்ளார். பின்னர், 7-ந் தேதி கோவிந்தம்மாள் காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார். இது குறித்து, கோட்டுச்சேரி போலீசில், ராஜுவை தேடி கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.






