search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deed"

    • உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 325 எக்டேர் பரப்பளவில் மார்கழி, தை பட்டத்தில் விவசாயிகளால் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினால் சான்றளிக்கப்பட்டு சான்று அட்டை பொருத்திய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் சேமித்து வைத்துள்ள உளுந்து விதைகள் அல்லது விற்பனையாள ர்களிடமிருந்து பெறப்பட்ட உளுந்து விதைகளை பரிசோதனை செய்த பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

    விதைப்பரிசோதனை நிலையத்தில் இவ்விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிறரக கலவன், பிற பயிர்கள் போன்ற காரணிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உளுந்து விதைப்பரிசோதனையில் பிற ரக கலவன்கள் ஏதேனும் இருப்பின் அதன் முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். விதைப்பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு ரூ.80 பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுடன், உளுந்து 100 கிராம் அனுப்பி விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறலாம்.

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதைபரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அருகில், மாவட்ட மைய நூலகம் மேல்புறம், துறைமங்கலம், பெரம்பலூர்-621 220 என்ற முகவரியில் செயல்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

    ×