search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Culverts Renovation Work"

    பருவ மழையை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இரும்பு மதகுகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    பூந்தமல்லி:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் நிரம்பினால் உபரிநீர் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    எனவே பருவ மழையை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இரும்பு மதகுகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரும்பு மதகுகள் சரியாக இயங்குகிறதா? என ஆய்வு செய்து, அதில் உள்ள இரும்பு சங்கிலிகளில் உராய்வு ஏற்படாமல் இருக்க ‘கிரீஸ்’ தடவும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரும்பு மதகுகளில் பெயிண்ட் அடிக்கும் பணியும் தொடங்கி உள்ளது. மதகுகள் அருகே தேவையின்றி வளர்ந்து இருக்கும் செடி, கொடிகளும் அகற்றப்பட்டு வருகிறது.

    தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 7.48 அடியாகவும், நீர் இருப்பு 450 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. ஏரியில் இருந்து 52 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ×