search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crops Drowned In Flood"

    அருணாசலப்பேரி கிராமத்தினுள் நேற்று வெள்ளம் புகுந்ததால் மிளகாய், தக்காளி உள்ளிட்ட 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
    ஆலங்குளம்:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை, குற்றால அருவிகளில் வெள்ளம் ஆகியவற்றால் ஆலங்குளம் தாலுகாவின் வடக்குப் பகுதி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நாகல்குளம் நிரம்பிய நிலையில் அதன் வடக்குக் கரை பகுதி அரிப்பு ஏற்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் இக்குளத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுத்தல்படி பொதுப்பணித்துறையினர் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர்.

    ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி வரும் நிலையில் அதன் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதிகளில் மண் மூட்டைகளை அடுக்கி அரிப்பை தடுத்தனர்.

    நெட்டூர் சிற்றாற்றில் வெள்ளம் அதிகரித்த நிலையில் அருணாசலப்பேரி கிராமத்தினுள் நேற்று வெள்ளம் புகுந்தது. வயல் வெளிக்குள் வெள்ளம் பாய்ந்ததால் மிளகாய், தக்காளி உள்ளிட்ட 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. சம்பவ இடங்களுக்கு சப்-கலெக்டர் விஜயகுமார், ஆலங்குளம் தாசில்தார் பிரபாகர் அருண், ஆலங்குளம் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் வடியும் வகையில் பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைத்தனர். இதனிடையே அருணாசலப்பேரி கிராமத்தில் வந்த வெள்ளத்தில் மான் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தது.



    ×