search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cristiano Ronaldo tax issue"

    கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாண்டு தண்டனைக்குப் பதிலாக 16.8 மில்லியன் பவுண்டு செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். #CR7 #ronaldo
    கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, தற்போது யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும்போது 2011-ல் இருந்து 2014-ம் ஆண்டு வரை ரொனால்டா தனது படம் உரிமை (image-rights) மூலம் பல மில்லியன் பவுண்டு கணக்கில் வருவாய் பெற்றார். அப்போது 12.1 மில்லியன் பவுண்டு வரி ஏய்ப்பு செய்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள்.



    இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வரிஏய்ப்பு மற்றும் வழக்கை நடத்துவதற்கு தேவைப்பட்ட பணம் ஆகியவற்றை அபராதமாக கட்ட வேண்டும். இல்லை என்றால் இரண்டாண்டு தண்டனை பெற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இது ரொனால்டோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில் வரி ஏய்ப்பிற்கான பணத்தை கட்டுவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரி ஏய்ப்பாக 12.1 மில்லியன் பவுண்டும், வழக்கு நடத்துவதற்கான தொகை 4.7 மில்லியன் பவுண்டும் கட்ட உள்ளார்.
    ×