search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contract Nurse"

    • ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு.
    • மருத்துவ துறையில் 2,200 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் பணிநீக்கம் என்பது அரசின் நோக்கம் இல்லை.

    சென்னை:

    கொரோனா காலத்தில் மருத்துவ அவசர கால நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2,300 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கடந்த 31-ந்தேதியுடன் அவர்களின் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு மீண்டும் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    இருப்பினும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மாவட்டங்களில் நர்சுகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்களை தேடி மருத்துவம் ஆகிய இடங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும்.

    அவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மருத்துவ துறையில் 2,200 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் பணிநீக்கம் என்பது அரசின் நோக்கம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×