search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of ration rice"

    • காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. .
    • ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு மாரியம்மன் கோவில் அருகில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த காரில் 4 சாக்கு மூட்டையில், சுமார் 200 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 டன் சிக்கியது
    • ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) இவரது வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் எஸ்.ஐ.முத்தீஸ்வரன் ஆகியோர் சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்த போது வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 75 மூட்டையில் சுமார் 3 டன் கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இந்த ரேஷன் அரிசிகள் திருமால்பூர் அன்வர்திகான்பேட்டை பள்ளூர் பளப்பாக்கம் ரெட்டிவலம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு சேமிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இதில் ரேஷன் கடையில் வேலை செய்யும் விற்பனையாளர்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இந்த பகுதியில் லாரி மூலம் ரேசன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பே ட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கபுரம் ெரயில்வே நிலையத்தில் ரேசன் அரிசி கடத்த ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் ெரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு படை உதவி ஆய்வாளர் கேமன் குமா ர தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பாரம் அருகே முட்புதரில் 22 அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நடுபட்டறை பகுதியில் தாசில்தார் சோதனை
    • நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த நடுபட்டரை கிராம பகுதியில் இருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் சம்பத் உத்தரவின் ேபரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த் துறையினர், நடுபட்டறை பகுதிக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுடுகாடு முட்புதரில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்து வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி சுமார் 2100 கிலோ டன் கைப்பற்றினர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை வாணியம்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    ×