search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of ration rice"

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையில் அதிகாரிகள் சிலுக வயல் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பையில் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி டிரைவர் பார்த்திபனூர் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(27) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீடுகளில் ரேசன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தி செல்வதாக கூறினார். இது தொடர்பாக குற்றப்பு லனாய்வு பிரிவு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ ரேசன் அரிசி திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • 500 கிலோ சிக்கியது
    • உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோம நாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள முள் புதரில் ேரசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • 2½ டன் சிக்கியது
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குடிமை பொருள் பவங்கள் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. நந்தகுமாருக்கு நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலத்திற்கு கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் டி.எஸ்.பி. நந்தகுமார் சப் -இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலமையிலான குழுவினர் பச்சூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் அரசு வழங்கும் ரேசன் அரிசி சுமார் 2½ டன் இருப்பது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து பச்சூர் உணவு பாதுகாப்பு குடோனில் ஒப்படைக்கப்பட்டது .

    ரேசன் அரிசி கடத்தியதாக நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • அதிகாரிகள் சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தப்பள்ளி சோதனை சாவடி வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மினி வேனில் ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட 3.7 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    அதை கடத்தி வந்த பேரணாம்பட்டை சேர்ந்த பாஷா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    பேரணாம்பட்டு பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக ரேசன் அரிசியை சேகரித்து லாரியில் ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் உணவு வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜேஷ்குமார் தலைமை யில், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ் மற்றும் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காலை, ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசா ரணையில் முறைகேடாக கடத்தி சேமிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சுமார் 1200 கிலோ அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க உள்ளனர்.

    • வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு தனியார் பஸ்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாணியம்பாடி அருகே அண்ணாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து தும்பேரி பகுதியில் சாலையோரம் பாழடைந்த வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பயணிகள் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது சோமநாய க்கன்பட்டி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் மறைத்து வைத்திருந்த 10 மூட்டைகளில் இருந்த அரை டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ரேசன் அரிசியை நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகரிடம் ஒப்படைத்தனர்.

    • ரெயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கா் ெரயில் நிலையத்தில் மா்மகும்பல் அடிக்கடி ரேசன் அரிசியை கடத்தி வருகின்றனா்.

    இந்நிலையில் சோளிங்கா் ெரயில் நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வரும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு ெரயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோளிங்கா் ெரயில் நிலையத்தில் நடைமேடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

    அப்போது நடைமேடை அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை மர்கும்பல் ெரயிலில் ஏற்ற முயன்றனா். அப்போது ெரயில்வே பாதுகாப்பு படைவீரர்களை கண்டதும் அந்த கும்பல் நடைமேடையிலேயே அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    இதனையடுத்து 15-மூட்டைகள் கொண்ட சுமாா் 400 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்புபடை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றியவாறு டெம்போ வாகனம் ஒன்று வந்தது.
    • அதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சின்னப்ப நாயக்கன்பாளை யம் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றியவாறு டெம்போ வாகனம் ஒன்று வந்தது. அதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன் டிரைவர் தப்பி சென்றார்.

    இதையடுத்து குமாரபா ளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி டெம்போ வாகனம் மற்றும் அதில் இருந்த 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் துறை ஆர்.ஐ. பிரவீன் முன்னிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் ஒப்படைத்தார். டிரைவர் தப்பி ஓடியதால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • 2 பேர் கைது
    • கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன் அடிப்படையில், திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய் துறையினர் மதனாஞ்சேரி அடுத்த குறவன் வட்டம் பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.

    கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், வேலூர் குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை

    போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவுப்படி வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வழியில் மாத கடப்பா பகுதியில் உள்ள அண்ணாநகர் சோதனை சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 61 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக வாகனத்தை ஒட்டி வந்த திகுவாபாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் கணபதி(வயது 30) மற்றும் உரிமையாளர் குமார் (35) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ரேசன் அரிசி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 1½ டன் சிக்கியது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நின்று செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தி செல்கின்றனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் ரெயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் நேற்று திடீரென சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ரெயிலில் கடத்துவ தற்காக நடைமேடை அருகே முட்புதரில் 25 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 1½டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜாபேட்டை யில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இந்த ஆய்வின் போது பறக் கும்படை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர்கள் சரத்குமார், பாலகி ருஷ்ணன், பாணாவரம் கிராம உதவியாளர் வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை
    • ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் கடந்த ஒரு வாரமாக சங்கமித்ரா, லால் பாக், சேஷாத்ரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பாதுகாப்பு படை போலீஸ்சார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் ரெயில்களில் மர்ம நபர்கள் சிக்னலுக்காக மெதுவாக செல்லும் ரெயில்களில் முட்புதரின் மறைவில் சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைத்து ரெயில்கள் மூலம் கடத்துவதை கண்காணித்த பாதுகாப்பு படை போலீசார் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசியும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி என மொத்தம் 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் எடுத்து வந்து நேற்று வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.

    ×