search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி மூட்டைகள்.

    கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • 2 பேர் கைது
    • கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன் அடிப்படையில், திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய் துறையினர் மதனாஞ்சேரி அடுத்த குறவன் வட்டம் பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.

    கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், வேலூர் குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை

    போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவுப்படி வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வழியில் மாத கடப்பா பகுதியில் உள்ள அண்ணாநகர் சோதனை சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 61 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக வாகனத்தை ஒட்டி வந்த திகுவாபாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் கணபதி(வயது 30) மற்றும் உரிமையாளர் குமார் (35) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ரேசன் அரிசி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×