ஜோலார்பேட்டை அருகே ரேசன் அரிசி பறிமுதல்

சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பதுக்கி வைத்திருந்தனர் போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை அருகே ரேசன் அரிசி பறிமுதல்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பயணிகள் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சோமநாய க்கன்பட்டி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் மறைத்து வைத்திருந்த 10 மூட்டைகளில் இருந்த அரை டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ரேசன் அரிசியை நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com