search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut - Groundnut"

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட தேங்காய், நிலக்கடலை.
    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம் ,சோழசி ராமணி, மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், குரும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி.கவுண்டம்பாளையம், திடுமல், ஆனங்கூர்,

    பிலிக்கல்பாளையம், அண்ணாநகர் ,பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தேங்காய் பருப்புகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும்

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்க– ளின் முகவர்கள் ஏல முறை யில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 74.34 குவிண்டால் எடை கொண்ட 21ஆயிரத்து 822 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.39-க்கும், குறைந்த விலையாக ரூ.21.36-க்கும், சராசரி விலையாக ரூ.24.39-க்கும் என ரூ.ஒரு லட்சத்து78ஆயிரத்து 191க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 353.05 குவிண்டால் எடை கொண்ட 724 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.49-க்கும் சராசரி விலையாக ரூ.85 .60-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.76ம், குறைந்த விலையாக ரூ.66.30ம், சராசரி விலையாக ரூ.77.69-க்கும் என ரூ.28 லட்சத்து 51ஆயிரத்து 345-க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 115.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 347 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை காய் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.70.60-க்கும், குறைந்த விலையாக ரூ.61.70-க்கும், சராசரி விலையாக ரூ.67.50-க்கும் என ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 352க்கு விற்பனை ஆனது.

    இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 37 லட்சத்து94ஆயிரத்து 536க்கு விற்பனை ஆனது.

    ×