search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Climbing Mountain In Tiruvannamalai"

    திருவண்ணாமலை தீப மலையில் தடையை மீறி ஏறிய பெண்கள் உள்பட 12 வெளிநாட்டினரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #ThiruvannamalaiMountain #ForeignersArrested
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடையை மீறி தீப மலையில் ஏறினால் கைது நடவடிக்கை பாயும் என வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.



    ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அடிக்கடி தீப மலையில் ஏறி சிக்கி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தடையை மீறி மலையில் ஏறி மாயமாகினர்.

    3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவர்களை வனத்துறை குழுவினர் மீட்டனர். இந்த நிலையில், இன்று காலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பின்புறம் இருக்கும் கந்தாசிரமம் வழியாக வெளிநாட்டை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் தடையை மீறி தீப மலையில் ஏறினர்.

    இதுப்பற்றி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. வனத்துறையினர் விரைந்து சென்று மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்கள், ஐரோப்பியா லிக்டோனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர்கள், தீப மலையை சுற்றி பார்க்க ஏறியுள்ளனர். இதையடுத்து, அபராதம் விதித்த பிறகு 12 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThiruvannamalaiMountain #ForeignersArrested



    ×