search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad Awareness"

    • ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்றமாணவ மாணவிகள் அனைவரும் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடையே செஸ் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்கும், சர்வதேச விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அதனையடுத்து ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி நிலாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இதில் 2, 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது . வட்டார அளவில் வெற்றி பெற்றமாணவ மாணவிகள் அனைவரும் திண்டுக்கல்லில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என பயிற்சியாளர்கள் கூறினார்.

    • சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்செஸ் ஒலிம்பியாட் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 188 உலக நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்ஒருபகுதியாக இன்று செஸ் ஒலிம்பியாட் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஓட்டத்தினை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, எம்.எஸ்.பி பள்ளி உதவி தலைமைஆசிரியர் துரைராஜ், திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் அப்துல்நாசர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தங்கள் முகத்தில் சதுரங்க பலகையின் வடிவத்தை குறிப்பிடும் வகையில் உருவம் வரைந்து கலந்து கொண்டனர்.

    ×