search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad 2022"

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
    • பிரதமர் வருகையை முன்னிட்டு டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 28.07.2022 மற்றும் 29.097.2022 ஆகிய 2 நாட்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். பிரதமர் சென்னை வருகை தர இருப்பதால் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • நேரு உள்விளையாட்டு அரங்கம் 6ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம் ஆகும்.
    • 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் எ.வ.வேலு, நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நேரு உள்விளையாட்டு அரங்கை இன்று பார்வையிட்டோம்.

    28-ந்தேதி இங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்வில் பிரதமர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்கள்.

    தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும்.

    தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    நேரு உள்விளையாட்டு அரங்கம் 6ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம் ஆகும். 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம்.

    நேரு அரங்கில் 24-ந்தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.

    தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். தமிழர்கள் உபசரிப்பில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வீரர்களுக்கு உணவு வழங்கப்படும். முதலமைச்சர் அன்றாடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் விசாரித்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சியில் நடந்தது விரும்பத்தகாத சம்பவம், அரசு நடு நிலையாக செயல்பட்டு தவறிழைத்தோருக்கு தண்டனை பெற்றுத் தரும். இறுதி சடங்கில் மாவட்ட அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×