search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus conductor"

    நாகர்கோவில் அருகே டிக்கெட் எடுக்கும் தகராறில் பஸ் கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட் டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நாகர்கோவில்-பூதப்பாண்டி வழித்தடத்தில் சென்ற பஸ்சில் நாகராஜன் பணியில் இருந்தார். அப்போது இறச்சகுளம் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர் ஒருவர் பஸ்சில் ஏறினார். கண்டக்டர் நாகராஜன் அந்த மாணவரிடம் டிக்கெட் எடுக்க கூறினார். 

    ஆனால் அந்த மாணவர் தன்னிடம் பஸ் பாஸ் உள்ளதாக தெரிவித்தார். பஸ் பாசை காட்டுமாறு கண்டக்டர் கூறினார். ஆனால் மாணவர் பஸ் பாசை காட்டாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். 

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து அந்த மாணவர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். படுகாயம் அடைந்த கண்டக்டரை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசில் கண்டக்டர் நாகராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்டக்டரை தாக்கியதாக  கடுக்கரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    தனியார் பஸ் கண்டக்டரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கஸ்பா பேட்டை அசோகபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). தனியார் பஸ் கண்டக்டர்.

    இவர் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் அவரது பின்னால் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். நாச்சியார் தெருவில் சென்று கொண்டிருந்தபோது பிரபாகரன் பின்னால் நின்ற அந்த வாலிபர் திடீரென பிரபாகரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் திருடன்... திருடன்... என கத்தினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் செல்போனை பறித்து சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை விசாரணைக்காக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பிரபு (28) என்பதும் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    கண்டக்டர் இல்லாமல் பஸ் இயக்குவதை கண்டித்து வேலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர்:

    கண்டக்டர் இல்லாமல் பஸ்சை இயக்குவதை கண்டித்தும். போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட கோரியும். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும். கண்டக்டர் இட ஒதுக்கீட்டை தட்டி பறிக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பரசுராமன், ராமதாஸ், மோகன்ராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×