search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burning"

    பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி

    தருமபுரி - சேலம் மெயின் ரோடு ஒட்டப்பட்டியில் தொழில் மையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் மையத்தில் பட்டு நூல் தயாரிக்கும் தொழிற்சாலை, பைப், சின்டெக்ஸ் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலை, உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளில் இருந்து கழிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் அருகிலேயே எரிக்கச் செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மாசு புகையினால் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும், இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர்.

    எனவே, உரிய நிர்வாகத்தினர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×