search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget debate"

    • மத்திய பட்ஜெட்டில் முதலீட்டு செலவீனங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரை புதிய வரி முறை அதிகம் கவரக்கூடியதாக உள்ளது.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சமரசம் செய்யாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நலன் கவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவின நிதி அதிகரிப்பு.

    பெண்களுக்கு 7.5% வட்டியில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம். மத்திய பட்ஜெட்டில் முதலீட்டு செலவீனங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2013-14 காலகட்டத்தில் 2.91 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரை புதிய வரி முறை அதிகம் கவரக்கூடியதாக உள்ளது.

    7 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு எந்த விதமான வரியும் இல்லை. மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்திற்கான வைப்பு நிதி 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறை மிகவும் கவர்ச்சிகரமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×