search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakrid special prayer"

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு பின், ஆயிரக்கணக்கான வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேலான பள்ளி வாசல்களில்,பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தொடங்கியது.

    ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டி சார்பில் இஸ்லாமியா பள்ளி விளையாட்டு திடலில் தொழுகை நடந்தது.

    தலைமை இமாம் முகம்மது இபுராகிம் குத்பா உரையாற்றினார். கீழக்கரையில் உள்ள 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடந்தது.

    தங்கப்பா நகர் மதரஷா, பாரதி நகர், ஏர்வாடி, எக்ககுடி, கமுதி. முதுகுளத்தூர், சாயல் குடி, பனைக்குளம், பெரிய பட்டினம், ரகுநாதபுரம், திருப்புல்லாணி, தேவி பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் தொழுகை நடந்தது.

    தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், த.மு.மு.க., சார்பில் இடங்களில் சிறப்புத்தொழுகை நடை பெற்றது.

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை உற்சாகத்துடன் கொண்டாடினர்.அதன்படி புதுவை பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

    தியாகத்தை உணர்த்தும் வகையிலும் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது. அதன்படி புதுவை ஈத்கா திடலிலும், முல்லா வீதி முகமதியார் பள்ளி வாசல் உள்பட அனைத்து பள்ளி வாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல், வில்லியனூர் ஜூம்மா மசூதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    கேரள மாநிலத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதோடு, கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ள நிவாரண நிதியும் திரட்டப்பட்டது.

    பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

    கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளி வாசலிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×