search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Open Tennis"

    • அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்தார்.
    • ஜோகோவிச், முர்ரே ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார். இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லாரன் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்)-ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) மோதினர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றை யர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்)-ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) மோதினார்கள். இதில் சிசிபாஸ் 6-3, 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் டேனியல் இவன்ஸ் 6-4, 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் நோரி (இங்கிலாந்து), லெஹக்கா (செக் குடியரசு), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்)-ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லாரன் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் அசரென்கா (பெலாரஸ்), காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான எம்மா ராடுகானு (இங்கிலாந்து) 2-வது சுற்றில் தோற்றார். அவரை அமெரிக்காவின் கோகோ காப் வீழ்த்தினார்.

    ×