search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aruppukottai Devanga Arts College"

    மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குநர் அம்பலவாணன் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு நேரடியாக வந்து இன்று விசாரணை நடத்தினார்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அந்த கல்லூரியில் ஊழியர்களின் பேராட்டத்தால் பிரச்சினை எழுந்துள்ளது.

    அங்கு பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் கல்லூரி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக கூறி நேற்று பெண் ஊழியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கல்லூரியில் அடிக்கடி நடக்கும் போராட்டத்தினால் கல்வி பாதிக்கப்படுவாக கூறி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவ - மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குநர் அம்பலவாணன் மற்றும் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரடியாக வந்து இன்று விசாரணை நடத்தினர்.

    கல்லூரி முதல்வர் பாண்டியராஜிடம் நிர்வாக பிரச்சினையில் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    முதல்வர் அறையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கல்லூரி ஊழியர்கள் திடீர் என நுழைந்து இணை இயக்குநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். இதை கண்டித்து அலுவலக ஊழியர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×