search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arabic Universities"

    • மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் செய்யது அப்துர்ரகுமான் தலைமை தாங்கினார்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களை மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு தைக்காதெரு மகான் சாகிப் அப்பா தர்கா வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குர்ஆன் ஓதுதல் ஆகியவை நடந்தன. பின்னர் ஜலாலியா திருமண மண்டபம் அகீதா அரங்கத்தில் உலமாக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து அரபிக் கல்லூரி மாணவர்களின் சங்கமம், இளைஞர்கள் கருத்தரங்கம், இஸ்லாமிய கண்காட்சி ஆகியவை நடந்தன. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் செய்யது அப்துர்ரகுமான் தலைமை தாங்கினார். சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மாநில தலைவர் முகம்மது நவ்பல் வரவேற்று பேசினார்.

    கேரள கல்வி அமைப்பின் நிறுவனர் அப்துல் ஹக்கீம் அஸ்ஹரி தொடக்க உரையாற்றினார். தமிழக முஸ்லிம் ஜமாஅத் துணைத் தலைவர் மன்சூர், யூனுஸ், செய்யது சாதிக் அலி, மூஸா, முகைதீன் தம்பிதுரை, ஜவாஹிர், நூருல் ஹக், அப்துல் காதர், அகமது முகைதீன், அரபிக் கல்லூரி முதல்வர் காதர் சாகிபு, காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    அகமது அப்துல் காதிர், அப்துல் ஹக்கீம் இம்தாதி, தேவர்சோலை அப்துல் சலாம், நிஜாமுதீன், கமாலுதீன், தாஜுதீன், செய்யது அப்துர் ரகுமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் இப்ராகிம் கலீல் அல்புகாரி பிரார்த்தனை உரை நிகழ்த்தினார்.

    அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்பை பெறும் வகையில் தமிழகத்தில் கூடுதல் அரபி பல்கலைக்கழகங்களை நிறுவிடவும், 7 ஆண்டுகள் அரபி பயிலும் மாணவர்களின் சான்றிதழ்களை அரசு அங்கீகரிக்க வலியுறுத்தியும், பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் கொடூர போர் நடவடிக்கைகளை சர்வதேச அமைப்புகள் தடுக்க கோரியும், பள்ளி, கல்லூரி மாணவர்களை மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மாநில பொருளாளர் முகம்மது அன்வரி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை அமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் செய்யது அப்பாஸ் அலி, முகமது ஷா, ஜெஸ்முதீன், முகம்மது ஹசீம், மன்னர் அப்துல்லா, சுஐபு ரகுமான், செய்யிது முகம்மது புகாரி, சுலைமான் உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×