search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti corruption measures"

    லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கும் இனி தண்டனை விதிக்க வகை செய்யும் ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. #MonsoonSession #Corruption #Bribe
    புதுடெல்லி:

    கடந்த 2013-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் பின்னர் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் தூசு தட்டப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்த சட்ட மசோதாவில் பல திருத்தங்களை மேற்கொள்ள உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் மீண்டும் மசோதா நிறைவேறுவதில் காலதாமதமானது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் 43 திருத்தங்களுக்கு பிறகு இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், இன்று மக்களவையிலும் ஊழல் தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் படி, லஞ்சம் வாங்கும் நபர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கும் ஏழு ஆண்டுகள் சிறை அல்லது அபராதாம் விதிக்கமுடியும். மேலும், லஞ்ச வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி, 2 ஆண்டுகளுக்கும் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளது. 

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×