search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Salai Metro train work"

    அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாலையை கடக்க பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். #MetroTrain

    சென்னை, செப். 16-

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந் தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர் மட்ட பாதை யிலும், திருமங் கலம் - சென்ட்ரல் வரை சுரங் கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பொது மக்கள், பயணி கள் வரவேற்பை யொட்டி மெட்ரோ ரெயில் திட் டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப் பட்டு வருகிறது.

    அண்ணாசாலையில் டி.எம்.எஸ். - தாராப்பூர் டவர் சந்திப்பு வரையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக அண்ணா சாலையில் ஆங்காங்கே சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து ஒருவழப்பாதை வழியாக சென்று வருகின்றன.

    இந்த நிலையில் அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா மற்றும் எல்.ஐ.சி., தாராப்பூர் டவர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

    சாலையை கடக்க பொது மக்கள் அவதிப்படுகிறார்கள். அப்பகுதியில் உள்ள போக்கு வரத்து சிக்னல்களும் சரிவர செயல்படவில்லை.

    அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலகத்துக்கு படிக்க செல்பவர்களும் கடும் அவதிப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் சிறுவர் களும் சாலையை கடக்க முடி யாமல் தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், ‘மெட்ரோ ரெயில் பணியால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். மெட்ரோ ரெயில் பணியை துரிதமாக முடிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர். #MetroTrain

    ×