என் மலர்

  நீங்கள் தேடியது "Anjukramam student missing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஞ்சுகிராமம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாகர்கோவில்:

  அஞ்சுகிராமம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்யா (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்யாவை பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் தற்போது திருமணம் செய்து கொடுக்கவில்லை என கூறிவிட்டனர்.

  பின்னர் கடந்த 22-ந்தேதி சத்யா மட்டும் வீட்டில்  தனியாக இருந்த அவர் திடீரென மாயமானார். வீடு திரும்பிய அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் அவரது அண்ணன் சரவணன் (30) என்பவர் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  எனது தங்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரைகுளத்தை சேர்ந்த சிலர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் நாங்கள் பெண் தர மறுத்துவிட்டோம். இந்த நிலையில் வீட்டில் இருந்த எனது தங்கையை அவர்கள் கடத்திச் சென்று உள்ளனர். எனது தங்கையை அவர்களிடம் இருந்து மீட்டுத் தரும்படி அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

  இதுகுறித்து அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவை தேடி வருகிறார்.

  அஞ்சுகிராம் குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சங்கீதா (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வலைக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மாயமானார். வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் சங்கீதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் எங்கும் இல்லாததால் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.

  புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
  ×