search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.D.M.K. Indictment"

    தி.மு.க. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர்  அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறக்க பா.ஜனதாவை சேர்ந்த வெங்கய்யா நாயுடுவை அழைத்துள்ளனர். 

    அதேநேரத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டுவோம் என பேசியுள்ளார். கருணாநிதி சிலையை திறக்க வெங்கய்யா நாயுடுவை அழைத்ததை கைவிட வேண்டும். அல்லது பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசிய திருச்சி சிவா மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    கடந்தமாதம் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர்களை அழைத்திருந்தனர். ஆனால் எந்த பா.ஜனதா தலைவர்களும் திறப்பு விழாவில் பங்கேற்க–வில்லை. 

    மத்திய அரசை எதிர்ப்பது, திட்டங்களை விமர்சிப்பது என தி.மு.க. ஒருபுறமும், மறுபுறம் அவர்களை வைத்தே சிலை திறக்க அழைப்பது என நாடகமாடுகின்ற னர். இந்த சந்தர்ப்ப வாதத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

    ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது வேதனைப்படுத்துவதாக புதுவை காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.
     
    பேரறிவாளன் விடுதலை நாளை கறுப்புதினமாக அனுசரித்தனர். தற்போது மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராடப்போவதாக சொல்கின்றனர். இந்த போராட்டத்தில் எப்படி மற்ற கட்சியினரோடு காங்கிரசார் ஒன்றாக பங்கேற்பார்கள்? 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×