என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Xiaomi Band 7 pro"
- சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- Mi பேண்ட் 7 மாடலை விட சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலில் கூடுதல் அம்சங்கள் இருக்கும்.
சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதற்குள் அந்நிறுவனம் அதன் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்த தயாராகி விட்டது. அதன்படி சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடல் வருகிற ஜூலை 4-ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
Mi பேண்ட் 7 மாடலில் உள்ள அம்சங்கள் இதிலும் இருக்கும் என்றும், சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.
ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த அம்சங்கள் சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.