என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wheat Import"
- இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கோதுமை கையிருப்பு நாட்டில் உள்ளது.
புதுடெல்லி:
கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் 13-ம் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூறுகையில், இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கோதுமை கையிருப்பு நாட்டில் உள்ளது. இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பைக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.