search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wall demolished"

    • வ.உ.சி. மைதானத்தின் ஒரு புறத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
    • பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் சுற்றுச்சுவரை மர்மநபர்கள் இடித்துவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் பாளையின் மத்திய பகுதியில் வ.உ.சி. மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு புறத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    சுற்றுச்சுவர் சேதம்

    மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. விளையாட்டு மைதானத்தின் மற்றொரு புறத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைந்துள்ளது.

    இவை அனைத்தும் ஒருங்கே இணைந்தபடி சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் சற்று தொலைவில் சுற்றுச்சுவரை மர்மநபர்கள் சிலர் இடித்துவிட்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர்

    இதனால் அந்த சுவர் பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    உடனடியாக பாளை போலீசார் விசாரணை நடத்தினர். தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் அந்த சுற்றுச்சுவரை 2 அடி அகலத்திற்கு இடித்தது தெரியவந்தது.

    அனுமதி

    வ.உ.சி. மைதான வளாகத்தில் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு செல்வதற்கு வழிப்பாதை வேண்டும் என்பதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் என நினைத்து இடித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விரைவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வழிப்பாதைக்கான நடவடிக்கை எடுப்போம் என்றும் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    ×