search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voc ground"

    • நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அவர் சுதந்தி ரத்தி ற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிக்கிறார்.

    பின்னர் அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதனையொட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் என 3 துறையினரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    போலீஸ் கட்டுப்பாட்டில் மைதானம்

    நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிர வேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர். தண்ட வாளங்களில் மோப்பநாய் மூலமாக வெடிகுண்டு சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் நாளை காலை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி ரெயில் நிலை யத்தில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பவிநாயகம், மனோகரன், ரவிக்குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாடாக்கண்ணு மற்றும் போலீசார் அதிரடி சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே தண்டவாளம், ரெயில் பெட்டிகள், பயணிகள் உடமைகள் மற்றும் பார்சல் அறை ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாக தணிக்கை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்று தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார்.

    இதனையொட்டி கடலுக்குள் கடலோர போலீ சார் கப்பல் மற்றும் நவீன படகுகள் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
    • காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    நெல்லை :

    பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் 6-வது நாளான இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாட்டில்களில் பல வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    இது தவிர தேவர் குலத்தை சார்ந்த பொதுமக்கள் சார்பில் பனை பொருட்களான நார் பெட்டிகள், வண்ண மாலைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

    பத்தமடை பகுதியில் புகழ்பெற்ற கோரை பாய் தயாரிக்கும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கோரை புற்களைக் கொண்டு பாய் தயாரிக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

    இதுபோல ஐ.எஸ்.ஆர்.ஒ. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு அதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் அதில் பயனாளிகள் அடைந்த நன்மைகள் குறித்த புகைப்பட கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

    அதனையும் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொண்டனர். பழங்கால பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது.

    • நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீ சாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 7 துறைகளை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 247 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மாநகராட்சி கமிஷனருக்கு நற்சான்று

    விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 243 பேருக்கு நற்சான்றுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இதில் மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு சான்று வழங்கப்பட்டது.

    மேலும் பொறியியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றி யமைக்காக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி, இளநிலை பொறியாளர் ராமநாதன் ஆகியோருக்கும், பொதுசுகாதார பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோவுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் 2023-ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சர் காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்ட 100 காவலர்களுக்கு பதக்கங் களையும் அவர் வழங்கினார். விழாவையொட்டி வ.உ.சி. மைதானம் முழுமை யாக போலீசாரின் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வரப்பட்டது.

    உணவு பகுப்பாய்வு வாகனம்

    விழாவின்போது பாளை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனத்தை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும் இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது சத்தான உணவினை உட்கொள்ள வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சந்திப்பு மீனாட்சிபுரம் மற்றும் பர்கிட் மாநகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 24 பேர் செவ்வியல் நடனமாடினர். பேட்டை ராணி அண்ணா பள்ளி, ஜவகர் பள்ளி, கல்லணை பள்ளி மாணவிகள் கும்மி நடமாடினர். தொடர்ந்து பர்கிட் மாநகர் பள்ளி மாணவர்கள் கணியன் கூத்து மற்றும் பறை ஆட்டமும், மூலக்கரைப்பட்டி மாணவர்கள் நாட்டுப்புற நடனமும் ஆடினர். கடைசியாக செண்டை மேளம் முழங்க மேற்கத்திய நடனம் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    • நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளையில் இன்று தொடங்கியது.
    • போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கியது.

    30 அணிகள்

    மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அணியினர் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணிக்கும் தலா 8 பேர் வீதம் 240 பேர் பங்கேற்றனர்.

    12 வயதுக்கு குறைவான பெண்கள், 10 வயதிற்கு குறைவான ஆண்கள், 10 முதல் 12 வயதிற்குள்ளான ஆண் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நாளை வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பரிசு வழங்க உள்ளார்.

    • வ.உ.சி. மைதானத்தின் ஒரு புறத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
    • பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் சுற்றுச்சுவரை மர்மநபர்கள் இடித்துவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் பாளையின் மத்திய பகுதியில் வ.உ.சி. மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு புறத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    சுற்றுச்சுவர் சேதம்

    மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. விளையாட்டு மைதானத்தின் மற்றொரு புறத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைந்துள்ளது.

    இவை அனைத்தும் ஒருங்கே இணைந்தபடி சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் சற்று தொலைவில் சுற்றுச்சுவரை மர்மநபர்கள் சிலர் இடித்துவிட்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர்

    இதனால் அந்த சுவர் பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    உடனடியாக பாளை போலீசார் விசாரணை நடத்தினர். தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் அந்த சுற்றுச்சுவரை 2 அடி அகலத்திற்கு இடித்தது தெரியவந்தது.

    அனுமதி

    வ.உ.சி. மைதான வளாகத்தில் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு செல்வதற்கு வழிப்பாதை வேண்டும் என்பதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் என நினைத்து இடித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விரைவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வழிப்பாதைக்கான நடவடிக்கை எடுப்போம் என்றும் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    • நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பேருந்துநிலையம், பாளை பஸ் நிலையம், நவீன பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட சில பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதிதாக கட்டும் பணி, டவுன், பாளை மார்க்கெட்டுகள் புதுப்பிக்கும் பணி, பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்காக ஏற்கனவே அங்கு இருந்த கேலரிகள், பார்வையாளர்கள் கூடம், விளையாட்டு வீரர்கள் அறைகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வ.உ.சி. ைமதானத்தில் நவீன இருக்கைகள் மற்றும் மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேலரிகளில் அதிகபட்சமாக 1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். ேமலும் 24 வி.ஐ.பி.க்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 320 சதுர அடியில் பிரமாண்ட மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவிலும் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையிலும் 6 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளனர். மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு சிறப்பு நுழைவுப்பாதை, முக்கிய நபர்கள் வருவதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தும் வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாளை வ.உ.சி. மைதானம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    பணிகள் முடிந்துள்ள வ.உசி. மைதானத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ×