search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி

    • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    Next Story
    ×