search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்குகளை ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவ, மாணவிகள்
    X

    பாட்டில்களில் பல வண்ண ஒவியங்களை வரைந்த மாணவிகள்.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்குகளை ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவ, மாணவிகள்

    • மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
    • காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    நெல்லை :

    பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் 6-வது நாளான இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாட்டில்களில் பல வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    இது தவிர தேவர் குலத்தை சார்ந்த பொதுமக்கள் சார்பில் பனை பொருட்களான நார் பெட்டிகள், வண்ண மாலைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

    பத்தமடை பகுதியில் புகழ்பெற்ற கோரை பாய் தயாரிக்கும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கோரை புற்களைக் கொண்டு பாய் தயாரிக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

    இதுபோல ஐ.எஸ்.ஆர்.ஒ. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு அதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் அதில் பயனாளிகள் அடைந்த நன்மைகள் குறித்த புகைப்பட கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

    அதனையும் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொண்டனர். பழங்கால பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது.

    Next Story
    ×