search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidhan Soudha"

    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #KarnatakaCMRace #congress
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.

    ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #KarnatakaCMRace #congress

    ×