search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkatesan MLA"

    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. பெருமிதம்
    • என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மண்ணுக்கு வணக்கம் மாவீரர்களுக்கு வணக்கம் என்ற கருத்தின் அடிப்படை யில், என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இயக்கமானது தொடங்கப்பட்டது.

    இதன் நோக்கம் என்ன வென்றால் தேசத்திற்காக போர் செய்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற மண்களை சேகரித்து சுமார் 7,500 கலசங்களில் அவற்றை பராமரித்து அதனுடன் மரச் செடிகள் வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு அற்புதமான கோரிக்கையும் பிரதமர் மோடியால் நாட்டு மக்களுக்கு வைக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் சுமார் 7,500 கலசங்களில் மண்களை சேகரித்து மரச்செடிகள் உடன் அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவற்றை ஒருங்கிணைத்து தேசிய போர் நினைவு சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் என் மண் என் நாடு என்ற இயக்கத்தின் மூலம் அனைத்து தொகுதிகளிலும் அனைத்து பகுதிக ளிலும் பொது மக்களும்

    பா.ஜனதாவுடன் இணைந்து மண்களை சேகரித்து கலசங்கள் மரச்செடிகள் கொண்டு டெல்லிக்கு அனுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

    முக்கியமாக என் மண் என் நாடு முகாம் ஆனது நமது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான உணர்வை மேலும் பலப் படுத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் பெறப்பட்ட மண்ணிலிருந்து உருவாக் கப்படும். இந்த அம்ரித் வாடிகா கீழ் நாம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும், அவை ஒரு இந்தியா சிறந்த இந்தியாவின் தொலை நோக்குப் பார்வையை உணர செய்யும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை வகுத்து மலை பகுதியில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடி மதிப்பில் ஏற்கனவே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் மைதா னத்திற்கு வருவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 3.3 கி.மீ. தூரம் ரூ.21 கோடியே 70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, பாலங்கள் கட்டுவதற்காக பூமிபூஜைகள் நடந்தது. இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துகுமாரி, இளநிலை பொறியாளர் வெங்கேஷ் பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகள் இடைகரை பாலம் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் வரை நடைபெறும். வரும் டிசம்பர் மாதம் கடைசியில் சாலை பணிகள் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், நகர் செயலாளர்கள் மனோகர வேல் பாண்டியன், ரகுபதி, அணி அமைப்பா ளர்கள் சந்தன கருப்பு, பிரதாப், கார்த்திக், ராகுல், சாலை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மூக்கன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் மிக சிறப்பான முறையில் உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500 பேர் வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி என்கிற நாகம்மாள் முன்னிலை வகித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொதுச் செயலாளர் மதன், துணைத் தலைவர் பாபு, பொருளாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பிரியா, மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளர் சாய் சுதாகர், மாநில பிரசார பிரிவு இணை அமைப்பாளர் கிரிஜா, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளர் கீதா,

    பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வெங்கடாசலம், முருகன், பிரவீன், ஆகாஷ், பாலா, பாரதி, நாராயணன், பிரிட்டோ, அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.
    • நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.

    இதற்கு முடிவு கட்டும் விதத்தில் நமது மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    முக்கியமாக போலீசாரை சுதந்திரமாக செயல்படவும், பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உறுதி கொண்டு உள்ளார்.

    நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அதேபோன்று கடந்த காலங்களில் கிடைக்காத பல வசதிகள் தற்போதைய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது காவல்து றையினருக்கு தேவையான உள்கட்ட மைப்பு வசதிகள், போலீஸ் வாகன வசதி கள்,அவ ர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க ப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் சேதம் அடைந்த ரோந்து வாகனங்கள் இருந்த நிலை மாறி தற்போதைய ஆட்சி காலத்தில் புதிய நவீன ரோந்து வாகனங்கள் அதிக அளவில் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் அங்கங்கே நடக்கக்கூடிய சிறு குற்றங்களை ஒடுக்கும் வகையில் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ஆகவே இரவு நேர ரோந்து பணியை புதுவை மாநில அளவில் தீவிர படுத்த வேண்டும். முக்கியமாக சில மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் வரும் போது சிகப்பு , நீளம் வண்ணங்களில் எரியக்கூடிய விளக்குகளை ஆன் செய்தவாறு சுற்றி வருகின்றனர்.

    அவ்வாறு வருவதன் மூலம் குற்றம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக அச்சம் ஏற்படும். தற்போதைய ஆட்சி காலத்தில் தான் புதுவை வளர்ச்சி கண்டு வருகிறது.வருவாயும் பெருகி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருப்பதை மறுக்க முடியாது.

    ஆகவே அவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மேலும் முக்கியமாக குற்றங்களை தடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது சி.சி.டி.வி. கேமராக்கள் தான். அது போன்ற சி.சி.டி.வி. கேமராக்கள் அதிகளவில் புதுவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்தாலும் கூட அவற்றில் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்து சேதமடைந்து காணப்படுவதாக அறியப்படுகிறது.

    அவற்றை மாற்றும் நோக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் 180 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயததின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதோடு நில்லாமல் அவற்றை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே குற்றங்கள் ஒடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது.
    • கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் பேசியதாவது:-

    புதுவை போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்.

    குறிப்பாக பிங்க் பஸ்கள் பெண்களுக்காக இலவசமாக அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். கலை பண்பாட்டு துறையை பொறுத்தவரை அங்கு பணியாற்றுகின்ற லைப்ரரி பணியாளருக்கு ஊதியம் அதிகம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே பல லைப்ரரி பணியாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

    எனவே எதிர்காலத்தில் நமது ஆட்சி காலத்தில் இது போன்ற ஒரு நிலை மாற்றப்பட்டு அனைத்து நூலகங்களிலும் புத்தகங்கள் வாங்க வேண்டும். மேலும் இங்கு படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு, ஆண்டு தோறும், பல்வேறு கலைத்துறையினரை வரவைத்து சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி இங்கிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய கலை நிறுவ னங்களில் பணி கிடைக்கக்கூடிய வழிவகைகளை செய்து தர வேண்டும்.

    ஆதிதிராவிட நலத் துறையை பொறுத்தவரை அங்கு பணம் கொடுத்தால் தான் பட்டா என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். மேலும் புதுவை இடுகாடுகளில், இறுதி சடங்குகள் செய்வதற்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் ரூபாய் அளவிற்கு கூட பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று புதுவையில் மின் மயானங்கள் போதுமான தாக இல்லை என்று தெரிகிறது. கூடுதல் மின் மயானங்களை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×