search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toyota Supra"

    டொயோட்டா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மாடல் காரான சுப்ரா அதிநவீன புதுவித அம்சங்களுடன் உருவாகி வருகிறது.



    ஆங்கில திரைப்படங்களில் ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் என்ற 
    திரைப்படம் மிகவும் பிரபலம். இதில் இடம்பெறும் கார்கள் பலவும் மக்கள் மனதில் பசுமையாக பதியும் அளவுக்கு இவற்றின் செயல்பாடுகள் பிரமாண்டமாக, அசர வைக்கும் வகையில் இருக்கும். அவற்றில் டொயோடா நிறுவனத்தின் சுப்ரா மாடல் கார்கள் அனைவரையும் கவர்ந்த மாடல் என்றால் அது மிகையல்ல. 

    ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் முக்கிய இடம்பெற்றுள்ள சுப்ரா மாடல் தற்சமயம் புதிய அவதாரம் எடுத்து ஏ90 என்ற பெயரில் வெளிவர உள்ளது. முந்தைய மாடல்கள் அனைத்தும் இடது பக்க ஸ்டீரிங் உள்ளவை. இப்போது வலதுபுறம் ஸ்டீரிங் பொருத்தப்பட்டு டொயோடா சுப்ரா ஏ90 தயாராகிறது. 



    டெட்ராய்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் இப்போது அதிக எண்ணிக்கையில் தயாராகி வருகிறது. அடுத்து பாங்காக்கில் நடைபெற உள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியிலும் இது இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது புறம் ஸ்டீரிங் இருந்த மாடலைப் போன்றே பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாத மாடலாக இவை தயாரிக்கப்படுகின்றன. 

    இந்த காரில் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த கார் ரேஸ் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இதனாலேயே இது இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    டொயோட்டா சுப்ரா கார் என்ஜின் 197 ஹெச்.பி. திறன், 320 என்.எம். டார்க் செயல்திறன் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடல் 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. வலது புறத்தில் ஸ்டீரிங் உள்ளதால் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.
    ×