search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tatkal ticket"

    • ஏஜெண்டுகள் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வருமானம் ஈட்டி உள்ளது

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் வருமானம் அதிகம் கொடுக்கும் ரெயில் நிலையமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் இருந்து வருகிறது.

    தட்கல் டிக்கெட்

    இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு இடங்களுக்கு ரெயில் மூலம் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து செல்கின்றனர். அதில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இந்த முறையில் டிக்கெட் எடுக்க அதிகாலையில் இருந்து பயணிகள் வரிசையில் நிற்பார்கள். ஆனால் இந்த முறையிலும் ஏஜெண்டுகள் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    பயணிகள் சங்கத்தினர் புகார்

    இதனால் சில போலியான நபர்கள் பெயர்களை முன்பதிவு செய்யும் சீட்டில் எழுதி வரிசையில் வைத்து சென்று விடுகின்றனர். பின்னர் டிக்கெட் கொடுப்பதற்கு சிறிது நேரம் முன் வந்து, கல் போட்டு பிடித்த இடத்தில் நின்று விடுவதாகவும், இதனால் நேரடியாக வந்து டிக்கெட் எடுக்க காத்திருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும் பலரும் புகார் கூறி வருகின்றனர். சந்திப்பு ரெயில் நிலையம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தட்கல் டிக்கெட் எடுக்கும் நிலை இவ்வாறு இருப்பதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இங்கு தட்கல் டிக்கெட் எடுக்க நாள்தோறும் பலர் காத்திருந்து டிக்கெட் எடுத்துச் செல்லும் நிலையில் சில புரோக்கர்கள் போலியான முகவரியுடன் பெயர் மற்றும் விபரங்களை வெள்ளை தாளில் எழுதி அதன் மீது கல்லை வைத்து செல்கின்றனர். இதனால் உண்மையாக டிக்கெட் எடுக்க வரும் பலர் ஏமாந்து செல்கின்றனர்.

    தட்கல் முன்பதிவு திறக்கும் நேரத்தில் ரெயில் நிலையத்துக்கு வந்து காலை முதலே வரிசையில் நிற்பதாக கூறி உண்மையாக டிக்கெட் எடுக்க வருவோரிடம் தகறாறு செய்கின்றனர். இதனால் பலரும் மன உளைச்சலுடன் டிக்கெட் எடுக்க முடியாமல் செல்கின்றனர்.

    காவல்துறையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பொழுது சரியான நபரை அடையாளம் கண்டு வரிசையில் நிறுத்த வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×