search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tata H5X"

    டாடா H5X கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.




    2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா H5X கான்செப்ட் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. 

    கான்செப்ட் மாடலுக்கு முன்பே சோதனையை டாடா துவங்கியிருந்தது. இந்நிலையில், டாடா H5X சோதனையின் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்களில் காரின் தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் இந்த கார் தயாரிப்புக்கு தயாராகியுள்ளதை உணர்த்தும் வகையில் உள்ளது.

    லேன்ட் ரோவர் டிஸ்கவரி மாடலுடன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டு இருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகிறது. லேன்ட் ரோவரின் L8 பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா எஸ்.யு.வி. டிஸ்கவரி ஸ்போர்ட் அம்சங்களையும் பெறுகிறது. 



    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாடா கைப்பற்றிய ஜாகுவார் லேன்ட்ரோவர் நிறுவன பிளாட்ஃபார்ம் மற்றும் சில அம்சங்களை டாடா காரில் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    டாடா H5X தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் இறுக்கிறது. கான்செப்ட் மாடலில் இருக்கும் 80% வடிவமைப்பு நுனுக்கங்கள் அப்படியே இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைமை வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் தெரிவித்திருக்கிறார். ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான போது, கான்செப்ட் மாடல் அதிக வரவேற்புகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய டாடா H5X மாடலில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் 4WD டிரைவிங் சிஸ்டம்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புகைப்படம்: நன்றி CarDekho
    ×