search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu rain"

    தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    சென்னை:

    குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசாக மழை பெய்தது. இதனால் இன்று பகலிலும் சென்னையில் குளிர் நிலவியது.

    சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    செங்கல்பட்டில் 12 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மரக்காணம், வானூர், பொன்னேரியில் தலா 8 செ.மீ மழையும், பழனி, திண்டிவனம், நாகர்கோவில், பாளையங்கோட்டை, மாதவரம், ஆணைக்காரன் சத்திரம், ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    செங்கம், ராதாபுரம், கேளம்பாக்கம், மதுராந்தகம், ஜெயங்கொண்டம், சாத்தனூர் அணை, செஞ்சி, செங்குன்றம், புழல், மீனம் பாக்கம், ஊத்தங்கரை, பூந்த மல்லியில் 6 செ.மீ, உத்திரமேரூர், பேச்சிப் பாறை, சென்னை வடக்கு, திருவண்ணாமலை, திருத் துறைப்பூண்டி, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், ஆரணி, குட வாசல், செங்கோட்டை, திருவாரூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், செம் பரம்பாக்கம், காரைக் காலில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.

    தரமணி, தாமரை மைலம், விழுப்புரம், நாகப்பட்டினம், விருத்தாச்சலம், சிதம்பரம், குன்னூர், திருவள்ளூர், தாம்பரம், சீர்காழி, வந்தவாசி, அண்ணா பல்கலைக்கழகம், மேலாத்தூர், பரங்கிப் பேட்டை, சேத்தியா தோப்பு, தரங்கம்பாடி, நீடாமங்கலம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, போச்சம் பள்ளி, கடலூரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 4. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, செங்குன்றம், சோழவரம், கே.வி.குப்பம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், செங்கல்பட்டு, திருச்சுழி, தாமரைப்பாக்கம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், திருவள்ளூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மற்ற இடங்களில் 1 செ.மீ. அளவுக்கு மிதமான மழை பெய்துள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்துக்கு பிறகு 7-ந் தேதி காலை 8.30 மணி முதல் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பிரதேசங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இது 8-ந் தேதி காலை 8.30 மணி வரைக்குமான வானிலை நிலவரம் என்றும் தெரிவித்துள்ளது.

    ×