search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS XL"

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது XL மொபெட் மாடலை பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. #TVS



    அரசின் புதிய விதிமுறைகளுக்கேற்ப வாகனங்களை தயாரிக்கும் சவாலான பணிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. 

    அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர இருக்கும் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இப்போதிலிருந்தே தனது வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டது டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம். இந்நிறுவனத்தின் பிரபல மாடலான டி.வி.எஸ். XL புதிய விதிமுறைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

    இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் மொபெட்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது. மொபெட் உற்பத்தியில் டி.வி.எஸ்., ஹீரோ மற்றும் கைனெடிக் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இதில் ஹீரோ மற்றும் கைனெடிக் நிறுவனங்கள் மொபெட் உற்பத்தியிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போது மொபெட் உலகின் முன்னோடி நிறுவனமாக டி.வி.எஸ். திகழ்கிறது. 



    தங்களது ஆரம்ப கால வாகனமான மொபெட்டை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளது இந்நிறுவனம். பாரத் புகை 6 விதிக்கேற்ப வாகனங்களை வடிவமைத்து மாற்றுகிறது இதன் காரணமாக மொபெட்டின் விலை ரூ.29 ஆயிரத்திலிருந்து ரூ.38 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிகிறது. 

    புதிய டி.வி.எஸ். XL மாடலில் 4-ஸ்டிரோக் என்ஜின், 100 சி.சி. திறன் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி ஆகியவை சேர்க்கப்படுவதால் இதன் விலை அதிகரிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மொபெட் பிரியர்களுக்காக தொடர்ந்து நவீன வசதிகளை இதில் புகுத்தி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×